About Our Parish
St. Francis of Assisi Church was established in 1990 to serve the growing community of Assisi Nagar, Ganapathy, Coimbatore. The church was consecrated on October 9, 1994, and has since been a beacon of faith and charity.
Our parish is dedicated to St. Francis of Assisi, the patron saint known for his love of nature and service to the poor. We strive to follow his example in our daily lives and church activities.
ஆலயத்தின் பெயர்
புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம்
இடம்
கணபதி, கோயம்பத்தூர்
முகவரி
அசிசி நகர், அத்திபாளையம் பிரிவு, கணபதி, கோயம்பத்தூர் -06
மாவட்டம்
கோயம்பத்தூர்
மறைமாவட்டம்
கோயம்பத்தூர்
மறைவட்டம்
மேட்டுப்பாளையம்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை
அருட்பணி. விக்டர் பால்ராஜ்
குடும்பங்கள்
1500
அன்பியங்கள்
50
வழிபாட்டு நேரங்கள்
• ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி, காலை 08:15 மணி மற்றும் மாலை 05:30 மணி
• திங்கள் முதல் சனி வரை காலை 06:30 மணி திருப்பலி, நவநாள் ஜெபம்
• திருவிழா: அக்டோபர் 3வது வாரம் திருவிழா, கொடியேற்றத்துடன் ஒருவாரம் நவநாள் திருப்பலி
மண்ணின் இறையழைத்தல்கள்
• அருட்பணி. டேவிட் அலெக்ஸாண்டர், கோவை மறைமாவட்டம்
• அருட்பணி. சார்லஸ், OFM Cap
Location Map
வரலாறு
20 -ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் வளங்கள் காரணமாக கோவை மாநகரமானது மிக வேகமாக வளர்ந்து வந்தது. கிழக்கில் அவினாசி, பல்லடம், தெற்கில் பொள்ளாச்சி, மேற்கில் மருத்துவா மலை, வடக்கில் மேட்டுப்பாளையம், அன்னூர் வரை கோவையின் வளர்ச்சி பரந்து விரிந்து கிடக்கிறது.
01.06.1990 அன்று கணபதி, புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் தனிப் பங்காக உருவானது. அருட்பணி. உபகார மரிய சேவியர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 09.10.1994 அன்று மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்
• அருட்பணி. உபகார மரிய சேவியர் (1990-1995)
• அருட்பணி. ஸ்டீபன் ஆரோக்கிய ராஜ் (1995-1999)
• அருட்பணி. ஜோசப் தனராஜ் (1999-2002)
• அருட்பணி. ஜெயபால் (2002-2004)
• அருட்பணி. பால்ராஜ் வின்சென்ட் (2004-2006)
• அருட்பணி. C. S. மதலைமுத்து (2006-2011)
• அருட்பணி. ஜோசப் பிரகாசம் (2011-2016)
• அருட்பணி. ஜான் பால் வின்சென்ட் (2016-2025)
• அருட்பணி. விக்டர் பால்ராஜ் (2025 – தற்போது)