I sought the Lord, and he answered me; he delivered me from all my fears.
Psalms (34:4)
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
திருப்பாடல்கள் (34:4)
ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? திருப்பாடல்கள் (118:6)
The LORD is with me; I will not be afraid. What can mere mortals do to me?
Psalms 118:6
வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே; என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே. திருப்பாடல்கள் (18:32)
It is God who arms me with strength and keeps my way secure. Psalms 18:32
குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்: என் மக்கள் எனது வள்ளன்மையால் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா (31:14)
I will satisfy the priests with abundance, and my people will be filled with my bounty,” declares the LORD.
Jeremiah 31:14
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.
திருப்பாடல்கள் (89:21)
My hand will sustain him; surely my arm will strengthen him. Psalms 89:21
தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
திருப்பாடல்கள் (96:9)
Worship the Lord in the splendor of his[a] holiness; tremble before him, all the earth. Psalms 96:9
நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்.
உரோமையருக்கு எழுதிய திருமுகம் (13:8)
Let no debt remain outstanding, except the continuing debt to love one another, for whoever loves others has fulfilled the law. Romans (13:8)